எனது நத்தார் வாழ்த்துக்கள்.

என் வலைப்பூவில் வருகை தரும்

வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள்

அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய  chirst mas  வாழ்த்து அட்டைகள்  அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ்த்துகள்,சமயம் சர்ந்த வாழ்த்துகள் ,அனுதின வாழ்த்துகள். உங்களது திருமணஅழைப்பிதழ், விருதுகள் பற்றிய அறிவிப்பு,  என பல வசதிகள் உள்ளது உங்கழுக்கு தேவை யானதை தெரிவு செய்து உங்களது நண்பர்கட்கு அனுப்பி மகிழுங்கள்.  இங்கே
 என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார்


சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை.  இந்தியா என்றால் இந்தி  மொழியே  பிரதானமாக  அனைத்து  தளங்களில்  பரிந்துரைக்கப்படும்.  ஆனால்  நற்செய்தி  ஆரம்பத்தில் தேவன் தமிழ் மொழியைத் தெரிந்தது கொண்டது  போல் உலகின் இறுதி காலத்திலும்  இந்தியாவில் தமிழ் மொழியையே  தேவன் தெரிந்தது கொண்டார்.  இதோ இந்தளத்தில்  இறுதிக்கால  தீர்க்கதரிசன  செய்திகள் காணப்படுகின்றது.  இந்தியக் கொடியின் சின்னத்தின்  கீழ்  தமிழ் மொழி மட்டுமே  காணப்படுகின்றது.  எனவே, தமிழர்களாகிய நாம் எமது பொறுப்பை உணர்ந்து தேவன் வருகைக்கு நம்மை  ஆயத்தப்படுத்துவதுடன்  உங்களுக்கு  வேறு மொழி தெரிந்திருந்தால் இத்தளத்தில் உள்ள செய்தியைகளை  மொழி பெயர்த்து  நற்செய்தி பலரயை  செயன்றடைய உதவுங்கள்.
 இதோ
 இதோ இன்னொரு கிறிஸ்தவ தளம் இங்கும் உலக மொழிகளுடன் தமிழ் காண படுகின்றது நமக்கு பெருமை இங்கே 


சமைக்கலாம் வாங்க

,
இத்தளத்திற்கு சென்று பலவகையான சமையல் எப்படி செய்ய வேண்டும். என்பதை எளிதாக அறியலாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை  Video மூலம் விளக்குகின்றனர். ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Video மூலம் பார்க்கலாம்.

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற

நம்மிடம் இருக்கும்   புகைப்படங்களை   சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும்.  புகைப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை  இதில் உருவாக்க முடியும்
இங்கே

முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை

தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம்  அதற்கு  தமிழரே துணையாக  இருப்பர் என்பது  50 ஆண்டு  கால போராடம் ஒடுக்கப்பட்ட  வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத  பேரவலம்
முள்ளிவாய்காலில்  நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ்  தலைவர்கள்  சிங்கள அரசுடன் பதவிக்காக  ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின்  காவலர்  என  காட்டிகொள்ளும் சில தலைவர்கள்  யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி   ததும்ப   பேசுவதும்   பின்னர் கொழும்பில்  சிங்கள அரசுடன் இரகசிய    நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ   தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ  தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது  முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை  கிளர்ந்து  எழுந்தபோது  எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை  தமிழர்  நம்பலாம். உலக தலைவர்கள்  எம் தமிழ் தலைவர்களை  நன்றாக  அறிந்து  வைதுருக்கின்றனர்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த  உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு  தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட  முடியும்   என்றால்  ஈழ  தமிழர்  கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து  தமிழகத்தை   திரட்ட முடியாமல்   போனது   எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால்  தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ!   என்ற  மதிய  அரசின்  பயம்  காரணமாக  தமிழகத்தின்  கவனத்தை  திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார்  அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார்  அணை விவகாரத்தின்  வெற்றி     ஆனது    தமிழ் கட்சிகள்    தமது  கருத்து 
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம்  வெற்றியும்  பெறலாம்   இது இனியாவது   சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற  வேண்டும்  )) தந்தை செல்வா

பல மொழிகள் பேச வேண்டுமா 02 ?



அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.  உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும் இலகு உங்களுக்கு தெரிந்த மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும்,  நாம்  கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
 கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். .Facebook  வைத்திருபவர்கள் Facebook  ஊடாக இத்தளத்தில்  இணைந்து  கொள்ளலாம்.   

பிரெஞ்சு மொழி கற்க ?


அனைவருக்கும் பிரெஞ்சு பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.பேச  முடியவில்லை  என  கவலை  வேண்டாம்  இன்றே கவலையை  விட்டு  விடுங்கள.  உங்களுக்காகவே அருமையான  தளம் உள்ளது .  மிகவும் இலகு தமிழ்மொழி மூலம்  கற்கலாம். சரி பிரெஞ்சு  பேசுங்க 
  இங்கே 

உங்களது பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்க

பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்க   பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
Account Settings  — >Security  — >.Deactivate your account
நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் நீங்கள் விரும்பியதை  தேர்வு செய்யவும்.
Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்
அடுத்து  Confirm பட்டனை அழுத்தவும் பின்னர்  இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்த பின்னர்  Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால்
உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும்.

திரையின் வெளிச்சத்தை இலகுவாக மாற்றும் மென்பொருள்!

கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு மானிட்டர் திரையின் வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் கண்களை உறுத்தக் கூடியதாகவும், சில நேரங்களில் கண்களை பாதிக்க கூடியதாகவும்...,
இது (மானிட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை செய்கிறது iBrightness  எனும் மென்பொருள். 
சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்திருக்கும் இந்த மென்பொருள் மூலம் screen brightness ஐ மாற்றுவதுடன் மானிட்டரை நிறுத்திவைக்க அல்லது ஸ்கீரின் சேவரை ஆக்டிவேட் செய்யவும் முடிகிறது.

பிரபல சமூக தளங்களின் பட்டன்கள் ஒரே விட்ஜெட்டில்

பிரபல சமூக தளங்களின்  பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.அதற்கான  Widget  வடிவமைத்துக் கொள்ள இத்தளத்தில்  நுழைந்து   உங்கள்     விருப்பம்   போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள்  Get Button code  ஐ சொடுக்கி  Code  நகலெடுத்து கொள்ளுங்கள்   பின்னர்
 1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்
3<data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே Widget இன் code ஐ  அத்தளத்தில் இருந்து நகலெடுத்து ஓட்டவும் சரியான இடத்தில் சேர்த்து கொண்டவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள் அல்லது Blogger Widget  — >  Install blogger widget ஐ சொடுக்கி இணைத்து கொள்ளுங்கள்
சிறிய பட்டன் காண code  


<!-- AddToAny BEGIN -->
<a class="a2a_dd" href="http://www.addtoany.com/share_save"><img src="http://static.addtoany.com/buttons/share_save_171_16.png" width="171" height="16" border="0" alt="Share"/></a>
<script type="text/javascript" src="http://static.addtoany.com/menu/page.js"></script>
<!-- AddToAny END -->

                                                                                                                                                                             

ஏழைகளின் வாகனம்

இரண்டு ரப்பர் சில்லடா !!!!!
காற்றைக் குடிக்கும் சில்லடா !!!!
எம் பாரம் சுமக்கும் சில்லடா  !!!!
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!!!!!!!!!
ஏழைகளின் வாகனம்

லோகோக்களை தேடித்தர

 லோகோக்களை நொடியில் தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று Search என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Seek என்ற பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான லோகோக்கள் கிடைக்கும்.

வலைப்பதிவின் மூலம் பிரபலமான சிறுமி

இவர் தந்தைக்கு தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஸ்டைல்ராக்கி எனும் வலைப்பதிவு புகழ் பெற்று நியூயோர்க் டைம்ஸில் இவரை பற்றி எழுதுவதற்காக உங்கள் அனுமதி தேவை என அழைப்பு வந்த பின்னர் மட்டுமே தான் தொடங்கிய வலைப்பதிவினைப் பற்றி பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அதைப் பற்றி அறியும் போது அவளின் வலைப்பதிவுக்கோ சுமார் 50,000 வாசகர்கள்.
பிறக்கும் தன் போன்ற சிறுவர்களுக்கு புதிய விடயங்கள் நிறைய தேவை என்று யூடிப்பின் ஒரு சேனலில் சொல்கிறாள் 
 அனைத்து  றவுகளிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்.காண்க வீடியோ டெமோ   தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவி ???

" திருத்தூதர் பணிகள் 2 ஆம் அதிகாரம்  6 ஆம் வசனம் அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய ஒவ்வொருவரும் தம்  சொந்த  மொழிகளில்  அவர்கள்  பேசக்  கேட்டு குழப்பம் அடைந்தனர். எல்லோரும் மலைத்துப் போய் இதோ  பேசுகின்ற  இவர்கள்  கலிலேயர்  அல்லவா ? அவ்வாறு  இருக்க  நம்  தாய்  மொழியில்் இவர்கள் பேசுவதை நாம் கேட்பது எப்படி என வியந்தனர். "i

மேலுள்ள  வசனத்தில்  கூறப்பட்டது புனை கதையா  ? நடைமுறை  சாத்தியமானதா  ? எனக்குத்  தெரிந்த   வகையில்  ஆராய்கின்றேன்.
தற்பொழுது இணையத்தில்   Google Translate   பி ங் போன்றன எமது தாய் மொழியில் தட்டச்சுச் செய்ய உலகின் பல  மொழிகளில் கணணி மொழி பெயர்த்துத்  தருகின்றது. அத்துடன் அம்மொழியை வாசித்தும் ஓலி வடிவத்தையும்  தருகின்றது. இதன்  மூலம் ஒரு மொழியை ஒரு நொடிப் பொழுதில்  உலகின் பல மொழிகளில் மொழி பெயர்ப்பது சாத்தியம் என விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.
    
மேலே  வசனத்தில் கூறப்பட்ட     சம்பவம்    சீடர்கள்  மீது   பரிசுத்த ஆவி   இறங்கிய  பின்னரே  நடை  பெறுகின்றது . மேலுள்ள பந்தியை மொழி பெயர்ப்பாளராக கணணி தொழிற்படுகின்றது ஆனால் அன்று மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவியானவரே. திருத்தூதர் தம் சொந்த மொழியில் பே  பரிசுத்த ஆவியானவரே  மொழி  பெயர்த்து  அவரவர்  சொந்த மொழியில்  மாற்றி  அவர்களது  காதுகளில்   வைத்தார். ஆகவே      வேத வசனங்கள் கற்பனையோ ? கட்டுக்கதையோ இல்லை என்பது  விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன  கணனியால்  இவ்வளவு  செய்ய முடியும் போது பரிசுத்த ஆவியால் எவ்வளவு செய்ய முடியும் .   
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

ஆங்கிலத்தில் பேச

ஆங்கிலத்தில் பே  இத்தளத்தில் இணையவேண்டும்.நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. சரி ஆங்கிலத்தில் பேசுங்க.பேசிகிட்டே  இருங்க இங்கே 

துடிக்கும் நெஞ்சமே!

வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.
கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே !
மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே !
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.
வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே!


அசத்தும் ஆங்கில அகராதி

வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது. அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம். அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால், இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம். 
இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே    
 

நம்ம கஷ்டத்தை சொன்னாதான் !

"ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்."
"பையன் என்ன பண்றான்?"
"டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்!"

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! எப்படி?"
"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது, அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...!"


"பேஷண்ட் : டாக்டர்... என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு இதுக்கு என்ன பண்ணலாம்...?"
"டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்...!"

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?


ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

அடடா கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதையா??

இப்பகுதியில்  வரும் சம்பவங்கள் நாளிதழ்களில் வந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுதபட்டவை    

போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய  ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன்.  எப்படியாவது அதில்  என்ன  நடக்கிறது  என அறிய  வேண்டும் என முடிவெடுத்தேன்.  முதலில் எனது தலைமயிரை  முன்னோக்கி  வாரிவிட்டேன்.   எனது முகமும் வட்டமுகமாகவும்  சப்பை மூக்காவும்   இருந்தமையால் வாயிற் காவலர்  என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன்.   எங்கும்  இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது.  ஒரு மண்டபத்திற்குள்  சோதனையின் பின்னர் அனைவரும்  அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன்.  அருமையான  இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில்  இருந்து  வருகின்றேன்.  கனி மொழி     இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ    சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல்  என்னை மண்டபத்துக்குள்  அனுமதித்தனர்.   அடடா  கருணாநிதிசாருக்கு  இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய   சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின்  பெயர்கள்  சிறிது  மாற்றம்  செய்துள்ளேன் )
 சோமாபாய, SLசீரிஸ் , குறுநா , டுக்கிலஸ் , விம்மல் வீரவன்ச

  சில நிமிடங்களின் பின்னர் மிகவும் கலக்கமுற்ற  முகத்துடன்  மகிந்த வந்தார் . ஆயுபோவன்  வயக்கம் (வணக்கம் )சில வெள்ளைக்காரர்கள்  என் மீது  போர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும்  இவர்களை   வழிக்கு கொண்டு  வர  முடியவில்லை. இவர்களை எமது வழிக்கு கொண்டிவர என்ன வழியெனக் கூறுங்கள்.
விம்மல் வீரவன்ச :- சாகும்வரையான உண்ணா விரதம் இருப்பேன்.

மகிந்த:- மறுபடியும் நான் வந்து யூஸ் கொடுத்து  முடித்து  வைக்கவா ?

டுக்கிலஸ் :- அனைவருக்கும் இலவச   தொலைக்காட்சிப்பெட்டி  கொடுப்போம்

 முனைங் :-  சார் நம்ம  கருணாநிதி மாதிரியே பேசுறார் 


   
மகிந்த :- அட தொலைக்காட்சிப்பெட்டியைக் கண்டுபித்ததே  வெள்ளைக்காரர்தான்

குறுநா  :- உங்களது பெயரில் யாழில் ஒரு விளையாட்டு மைதானத்தைத் திறந்துவிடுவோம்.

மகிந்த :- எங்கே  வந்து எதைப்  பெசுவதுதெனத்  தெரியவிலையா?

SL சீரிஸ் :- வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்

மகிந்த :-      அதுதான் ஏற்கனவே வைத்திவிட்டேனே!

சோமாபாய :- இங்குள்ள ஒருவருக்கும்  உலக  அரசியல்  அனுபவம்  போதாது  அமெரிக்காவில்  வெள்ளைகளுடன்  நிண்ட  காலம்  வாழ்ந்தவன்  என்ற  வகையில்  இப்போது  வெள்ளைக்காரர்க்கு நிர்வாணமாக  நடமாடுவதுதான்.  ரொம்ப  பிடிக்கும் எனவே எமது  நாட்டில்  நிர்வாணமாக  நடமாடும் கடற்கரையைத்  திறந்துவிடுவோம்.   கழியாட்ட  விடுதிகளையும்  திறந்துவிடுவோம். தமிழரின்  கலாச்சாரமும்  அழிந்து  தமிழினமும்  அழிந்து போகும்  எமக்கு   நல்ல   வருவாய்   கிடைக்கும். போர் குற்றம் சுமத்தும் வெள்ளைக்காரர்களையும் அங்கு நடமாடவிட்டு   எமது கைக்குள்  கொண்டுவரலாம்.

மகிந்த: - அருமையான ஆலோசனை தம்பி உடனே தொடங்குவோம்.



முனைங் :-(அடட பாவிங்களா   என்ன   முடிவு எடுத்தாலும் தமிழனை அழிப்பதை மையமாக வைத்து எடுக்கிறாங்க. சிங்களவனுக்கு   தமிழனை அழிப்பது இரத்தத்தில் உறிவிட்டுது   போல!)

 

((உங்க உள்குத்து புரியல... உண்மையான செய்தி என்ன...?))ஆதாரம் இந்த பகுதி உருவாக  பின்னூட்டம்   மூலம்   வினவிய Philosophy Prabhakaranனுக்கு  எனது  நன்றிகள் 

ஆதாரம் :-(( நிர்வாணமாக  நடமாடும் கடற்கரையைத்  திறந்துவிடுவோம்.   கழியாட்ட  விடுதிகளையும்...... தமிழரின் கலாச்சாரமும் அழிந்து .....))) என்ன காரணம் காண்க இது நடை பெறபோகும் புதிய அழிப்பு

  கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்

((வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்..))) 

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் 02

முனைங்கின் அசத்தலான பதில்கள்

 வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய  முனைங்கின் அசத்தலான பதில்கள்
 
சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடிமா ??  
 

முனைங் :-  படிக்கமுடியும் 



சிங் சொங் :-  தமிழில் வலைப்பூவை நிர்வகிக்க தமிழ் தெரிய வேண்டுமா ???

 

 

 

முனைங் :- இல்லை.. Copy  பண்ணி Paste    பண்ண  தெரிந்தால்   போதும் 


சிங் சொங் :- மகிந்தராஜபக்சவுக்கு எய்ட்ஸ் வருமா ??
         

முனைங் :- ஏக்கம் வரும் 

 

சிங் சொங் :-  நீங்க ஒரு பல் டாக்டரா...?"
       

 முனைங் :- இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்...!"



  சிங் சொங் :-  விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர    முடியுமா...??

முனைங் :-இப்படி  கேட்டால்  நான் அழதுடுவன்


பழைய நகைச்சுவை இடுகைகள்

 

சிலந்தி மனிதன் 007

 

கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்

 






அதுக்கு இத்தனை கடினமா ???

 மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள்  நிறைந்து என்பதை  நகைச்சுவை உடன்  குறும்படம் ஒரு யட்டிக்காகவா??

எனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.

மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

இலங்கை இராணுவம் தமிழ்   மக்கள் மீது பலவிதமான முறையில் இன அழிப்பை   மேற்கொண்டது யாவரும் அறிந்ததே.  அதில் ஒரு   புதிய விடயத்தை  இப்போது  பகிர்ந்து  கொள்கின்றேன். 1990 - 1995 ஆண்டுவரை யாழ்ப்பாணம் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு   இருந்தது.அப்போது நான் 5 ஆம் வகுப்பு கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.  இலங்கை அரசாங்கத்தினால் மின்சார, பொருளாதாரத தடைகளையும் விதிக்கப்பட்டுருந்தது.  மாதம் ஒருமுறை இலங்கை  அரசாங்கத்தினால் அனுப்பப்படும் உணவே அனைவருக்கும்  பகிரப்படும்.     எனது பிறந்த நாளை விமர்சையாக  கொண்ட்டாட  எனது பெற்றோர்  முடிவு  செய்தனர்.     இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பலவிதமான  கேக்கு, இனிப்புப்  பண்டங்கள் என்பன செய்தார்கள்.  எனது பாடசாலைக்கும்  இனிப்புப் பண்டங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.  நானும்
மிக  சந்தோசத்துடன்  பாடசாலைக்குப்  போனேன்.  பாடசாலை ஆரம்பித்து 15 நிமிடங்களில் வானில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள்  பாடசாலையை அண்டி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.  இதனால் மாணவர்களும், ஆசிரிகளும் கால் போன போக்கில் ஓடினார்கள்.  நான் தனியே எங்கே ஓடுவது   என்று  தெரியாது அழுது கொண்டிருந்தேன். விமானத்திலிருந்து பாரிய  சத்தத்துடன்  ஒரு  குண்டு விழுந்த்தது. உடனே அருகிலுள்ள வீடுக்குள் ஒழித்துக் கொண்டேன்.  அங்கு யாரும் இருக்கவில்லை.  அடுத்த குண்டுச் சத்தம் என் நெஞ்சைப் பிளந்ததுடன் மிக அருகில் விழுவதுபோல் உணர்ந்தேன்.  எனவே என்ன நடந்தாலும் வீட்டிற்கு போவது என முடிவெடுத்தேன். வீட்டை நோக்கி ஓடினேன்.  நான் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் நான் ஒருபோதும் <  பார்த்திராத ஒரு நபர் வெள்ளை ஆடை அணிந்து மிக அழகாக நின்றுகொண்டிருந்தார்.  அவர் வந்த வழியாலே திரும்பி ஓடு தம்பி எனக்  கூறினார்.  நான் எனக்கு அருகில் நின்றவரிடம் இவ்வழியால் போகவேண்டாமாம் எனக் கூறினேன்.  அவர் யார் உனக்கு சொன்னது இங்கு உன்னையும் என்னையும் தவிர யாருமேயில்லை.  நீ சின்னப் பெடியன் உனக்கு என்ன தெரியும் நீ பயத்தில் ஊளராதே என்னுடன் வா என்றார்.  நான் முடியாதெனக் கூறி வந்த  வழியால் திரும்பி ஓடிவிட்டேன்.  ஓடி சிறுது தூரத்தின்  பின்னர் ஒரு குண்டுச்  சத்தம் கேட்டது.  அந்த  மனிதர்  போன பாதையில் விழுந்தது.  அவர் இறந்துவிட்டார்.அன்று என்னை வழிநடத்தியவர் ஆண்டவராகிய ஜெசுவே
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு


ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும். அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள் சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் தோன்றும் .

வலைப்பூக்கள் ஒரே தளத்தில்

 தமிழர்களுக்காக    தமிழில் உள்ள முன்னனி இணையத்தளங்கள்  வலைப்பூக்கள்   ஒரே   தளத்தில். நன்றி பூவரசு எனது தளத்தையும் இணைத்தமைக்கு கண்க பூவரசு


உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இதயத்துடிப்பினிலே.....  

எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே!

அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்

உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்

பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி

பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!

குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த

நீங்கள் பிரிய மனம் வந்ததோ!

அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!

உம் அன்பு மொழி எப்போது கேட்போம்!

உம் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்

உம் இறுதி மூச்சில் எத்தனை ஏக்கங்களுடன் சென்றிரோ!

ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இக் கவிதை இந்திய அமைதி படையால் கடுமையாக தாக்கி  இறந்த என் அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்

திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன்.

அண்மையில் மதுரையில் உள்ள பெரியார் நகர் பேரூந்து நிறுத்தத்தில் சுவரொட்டி ஒன்றைக் காண நேரிட்டது. அது ஒரு திருமண நிகழ்வு வரவேற்பு சுவரொட்டி அதன் வலது பக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்தார் பிரபாகரன்.

தற்போது அரசியலையும் தாண்டி தமிழகத்தில் திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன். இதன் மூலம் தமிழக மக்கள் தலைவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை தெளிவாகப் புலனாகிறது.

பிரபலமான மனிதர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு..


லக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது. உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் முக்கிய குறிப்பு =என்னைப்பற்றி அறிய இத்தளத்தில் தேடாதிங்க நான் இத்தளத்தில் உள்ளவர்களை விட  ரொம்ப பிரபல்ம்முங்கோ  அதுக்கு தான் இருக்கு google profile

இங்கே

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே!


இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள்  உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.


 இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.


 இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
 2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். 
 நன்றி eu

சுடர்தனை கேட்டால்





















கடலினைக் கேட்டால் என்  காதலினைச் சொல்லும் 
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை  கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப்  பார்த்தால்  உன் முகம்  பெண்ணே 
கண்ணென்றிருந்தால்  உன்னையே காணும்
எங்கும்  நீ தான் என் செல்லக் கிளியே!!!

நாம் பார்க்கும் இணைய தளம் பாதுகாப்பானதா என அறிய










பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.



இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம். சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
 இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 
1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.
2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 
3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 
4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.

ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் !!!!

அடஒருவருக்கு   ஐஸ்  வைப்பது  என்பது  இது தானா?  கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால்
ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.